in

திருச்சி பெல் நிறுவன ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்


Watch – YouTube Click

திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் சங்கங்கள் இணைந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது

திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல்நிறுவன அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரசின் ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத,மக்கள் விரோத, விவசாய விரோதப் போக்குகளைக் கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்கின்றனர்

திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவன அனைத்து தொழிற்சங்க சார்பில் அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து! உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள் மற்றும் இயந்திரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி.யை நீக்கு!! பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாகக் குறைக்க வேண்டும்

மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு, கொரோனா என்ற சாக்குப் போக்கில் பறிக்கப்பட்ட ரயில்வே சலுகைகளைத் திரும்ப வழங்க வேண்டும்

உணவுப் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளித்திடு! பொதுவிநியோக முறையை விரிவாக்கி செயல்படுத்த வேண்டும் இலவச கல்வி, சுகாதாரம், தண்ணீர் மற்றும் உடல் நலஉரிமை அனைவருக்கும் வழங்க வேண்டும் தேசியக் கல்விக் கொள்கை, 2020ஐ ரத்துசெய்ய வேண்டும்

அனைவருக்கும் வீடு வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் உழுபவருக்கே நிலம் சொந்தம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் தேசிய குறைந்தபட்ச ஊதியம், மாதத்திற்கு ரூ.26,000என நிர்ணயம் செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை உடனேநிறுத்து! மின்சாரம் (திருத்த) மசோதா, 2022ஐ திரும்பப் பெறு! முன்பணம் செலுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தாதே100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி கொடுத்து தின கூலி ரூபாய் 600 ஆக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெல் நிறுவன தொழிற்சங்கலான தொமுச அண்ணா தொழிற்சங்கம் பி எம் எஸ் சிஐடியு எஐடிசி உள்ளிட்ட 10 சங்கங்கள் இணைந்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


Watch – YouTube Click

What do you think?

ஸ்டெர்லைட் வழக்கு 20 ஆம் தேதி இறுதி விசாரணை

விவசாயி சின்னம் கிடைப்பதில் சீமானுக்கு சோதனை