கூட்டணி தர்மத்தை மதித்து நாங்கள் உண்மையாக இருக்கிறோம் மேடைப்பேச்சு குறித்து பிரேமலதா கருத்து.
முதல்வர் அனைவருக்கும் சமமானவர் உறையும் செயல்பாடும் மக்களுக்கயிடையே பாகுபாடு இல்லாமல் சமமாக இருக்க வேண்டும் மேடைப்பேச்சு குறித்து பிரேமலதா கருத்து.
விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் இன்று சட்டமன்ற அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார் அப்போது செய்தியாளரிடம் கூறியதாவது
15 நாட்களுக்கு ஒரு முறை தொகுதிக்கு வருவேன் மூன்று நாள் தங்கி தொகுதி மக்களிடம் குறைகளை கேட்பேன்.
விருத்தாச்சலம் மக்களின் பிரதான கோரிக்கையான விருத்தாசலத்தை மாவட்டமாக்குவது இது தொடர்பாக முதல்வரிடம் பேசி மாவட்டத்தை உருவாக்குவேன் அடுத்தபடியாக பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மின்விளக்கு இல்லாமல் உள்ளது குறிப்பாக கட்டப்பட்ட புதிய பாலங்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருக்கிறது .
துறை சார்ந்த அதிகாரிகளை வரவைத்து மின்விளக்கு அமைக்க ஏற்பாடு செய்வேன் நகரில் தூய்மையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சிங்கப்படை சீக்கிரமா அமைக்க வேண்டும் முதல்வர் அவர்களே தமிழ்நாடு முழுக்க பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் சிறு குழந்தைகள் முதல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும்.
தமிழக அமைச்சர்கள் செயல்பாடுகளை குறித்து கேட்டபோது அவர்கள் பொறுப்பேற்று ஒரு மாதம் தான் ஆகிறது போகப்போக அவர்களின் செயல்பாடுகள் தெரியவரும் முதல்வர் என்பவர் அனைவருக்குமானவர் முன்பு அவர் தலைவராக இருந்தார் இப்போது எல்லோருக்குமான முதல்வராக இருக்கிறார் எனவே அவர்கள் உரை என்பது சமமானதாக இருக்க வேண்டும் தொடர்ந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டவசமானது என துரை வைகோ பேசியது குறித்து கேள்விக்கு பிரேமலதா கூறுகையில் அவர்களின் கருத்திற்கு நான் பதில் கூற முடியாது அவரிடம் தான் கேட்க வேண்டும் .
என்னை பொறுத்தவரை கூட்டணி தர்மத்தை மதித்து உண்மையாக இருக்கிறோம் திமுக கூட்டணியில் தான் தொடர்ந்து இருக்கிறோம் விருத்தாச்சலம் தொகுதியில் டாஸ்மார்க் மூடப்படாமல் உள்ளது அதேபோல ரேஷன் கடைகளில் மக்கள் கும்பலாக நிற்பதை அறிகின்றேன் வீட்டுக்கு வீடு பொருட்கள் கொண்டு சேர்க்கப்படும் என கூறினார்கள் .
ஆனால் அது செயல்பாடு இல்லாமல் வயதானவர்கள் ரேஷன் கடைகளில் நிற்பதை நான் பார்க்கிறேன் வாக்குறுதி கொடுத்தால் அதை செயல்படுத்த வேண்டும் இல்லை என்றால் மக்கள் கேள்வி எழுப்புதல் செய்வார்கள் என பேசினார்.

