செஞ்சி அரசு பள்ளியில் மாணவர்களை இனிப்பு கொடுத்து வரவேற்ற பள்ளி ஆசிரியர்கள்
செஞ்சி அருகே அரசு பள்ளியில் மாணவர்களை இனிப்பு கொடுத்து வரவேற்ற பள்ளி ஆசிரியர்கள்.
ஆங்கில பாடத்தில் சரளமாக படித்து காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவிகள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தளவானூர் அரசு நடுநிலைப்பள்ளி 2026 – 2027 கல்வி ஆண்டிற்கான பள்ளி துவக்க நாளான இன்று காலை பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்என் பழனி தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் இடைநிலை ஆசிரியர் கர்ணன் முன்னிலையில் சொர்ண லட்சுமி, ரெஜிஸ் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இனிப்புகள் வழங்கியும் மற்றும் அரசு வழங்கும் பாடநூல் மற்றும் சீருடைகளை வழங்கியும் சிறப்பாக வரவேற்று மகிழ்ந்தனர்.
மேலும் முதலாம் வகுப்பு சேர்க்கைக்கு வந்த மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாட நூல் மற்றும் சீருடைகளை வழங்கி வரவேற்று மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பள்ளிக்கு உற்சாகமாக சென்ற நிகழ்வு அப்பகுதியில் மகிழ்ச்சியான சூழ்நிலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இன்று துவக்கப்பட்ட பள்ளிக்கு வந்த மாணவிகள் மகிழ்ச்சியாகவும் தாங்கள் அரசு பள்ளியில் படித்தாலும் மருத்துவராகவும் வர வேண்டும் என்பதில் ஆர்வமுடன் படித்து வருவதாகவும் அதற்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊக்கம் அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் அரசு பள்ளிகளில் படித்தாலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஆங்கில பாடத்தை சரளமாக படித்து அசத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தமிழ் ஆசிரியர் சலோனாமேரி கம்ப்யூட்டர் ஆசிரியர் சித்ரா, பள்ளியின் சத்துணவு பொறுப்பாளர் மீனா கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.
