in

பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய – திரைப்பட நடிகர் சதீஷ்


Watch – YouTube Click

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் 23-வது ஆண்டு விழாவையொட்டி மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவிற்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் முனைவர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். இயக்குனர் டாக்டர். அண்ணாமலை ரகுபதி முன்னிலை வகித்தார். கல்லூரியின் டீன் சுப்பராஜ் அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் காசிநாத பாண்டியன் ஆண்டறிக்கையினை வாசித்தார்.

இவ்விழாவில் திரைப்பட நடிகர் சதீஷ் ,சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அப்பொழுது அவர் பேசுகையில்:

எனக்கு முன் உதாரணமாக நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய், கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி கொண்டுள்ளேன்.ஆணும் பெண்ணும் சமம் அல்ல ஆணை விட உயர்ந்தவர் பெண்.ஒரு பெண் என்பவள் கல்வி கற்று திருமணமாகி குழந்தை பெற்று வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்து அனைத்து வேலைகளும் செய்வதால் ஆணை விட உயர்ந்தவளாக பெண் கருதப்படுவது மட்டுமல்ல கடவுளாகவும் கருதப்பட வேண்டும்.நாகரீக உலகில் தனி குடித்தனம் நடத்த அப்பா அம்மாவை முதியோர்கள் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள்.ஜாதி மதம் பார்க்காமல் பழகுங்கள். ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுங்கள். மது,சிகரெட் உள்ளிட்ட போதை பழகக்கத்திற்கு அடிமையாதீர்கள் என அறிவுரை கூறி சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து,கல்வியாண்டில் கல்வி விளையாட்டுப் போட்டிகள் கலாச்சார நிகழ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் கேடயத்தினை வழங்கினார்.

அதன் பின்னர்,கல்லூரி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவின் முடிவில் மாணவர் தலைவன் மைக்கேல்ராஜ் நன்றி கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சி விமான நிலையத்தில் உடலில் மறைத்து எடுத்து வந்த தங்கம்

உத்ரகாண்ட்டில் காட்டுத்தீ 3 பேர் கைது ராணுவம் களம் இறங்கியது