in

திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா ரோடு‌ ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


Watch – YouTube Click

திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா ரோடு‌ ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது.. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கருப்பையா போட்டியிடுகிறார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் பொது மக்கள் ஆரத்தி எடுத்து மலர் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

புதன்கிழமை மாலை 5 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது..

இந்த நிலையில் திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா ரோடு‌ ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..

பெரியகடை வீதி, மலைக்கோட்டை, தெப்பக்குளம், வாணப்பட்டறை, மேலப்புலிவார் சாலை, காமராஜர் வளைவு ஆகிய பகுதிகளில் இன்று வேட்பாளர் கருப்பையா திறந்த வெளி வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், பா.குமார், அமைப்பு செயலாளர்கள் மனோகரன், ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

உணவகத்தில் இட்லி சுட்டு பூரி தயாரித்து பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரி

திருச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து கார்வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து