in

7000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணியில் உலக சாதனை


Watch – YouTube Click

தென்காசி மாவட்டத்தில் 500 கிராமிய கலைஞர்கள், 7000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணியில் உலக சாதனை படைத்து மாவட்ட நிர்வாகம் அசத்தல்

பெண்கள் மற்றும் மாணவிகளின் ஆரவாரத்துடன் விழிப்புணர்வு பேரணி கோலாகலம்

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் பொது மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கையெழுத்து இயக்கங்கள், வாகன பேரணிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி இன்று பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிப்பதை வலியுறுத்தியும், நேர்மையான முறையில் தேர்தலை சந்திப்பதை வலியுறுத்தியும் உலக சாதனை படைக்கும் வகையில் பிரம்மாண்ட வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள், 7000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்.

இந்த பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணியில் குழு குழுவாக சேர்ந்து பெண்கள் ஒயிலாட்டம், கோலாட்டம் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய முளைப்பாரி உள்ளிட்டவை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். தொடர்ந்து பறை இசைகள் முழங்க, செண்டை மேளம் வாசிக்க, பரதநாட்டியங்கள் வில்லிசை உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பேரணி களைகட்டி காணப்பட்டது.

தொடர்ந்து கல்லூரி மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன்களை ஏந்தியவாறு தேர்தலை நேர்மையாக சந்திக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆரவாரத்துடன் பேரணியில் பங்கேற்றனர். புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியானது 2 கிலோமீட்டர் தொலைவு வரை வளம் வந்து குத்துக்கல்வலசை பகுதியில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் எலைட் உலக சாதனை நடுவர் ரக்‌ஷிதா உலக சாதனைக்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள், கல்லூரி மாணவிகள், கிராமிய கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்தார்.தென்காசி மாவட்டத்தில் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்ற உலக சாதனை தேர்தல் விழிப்புணர்வு பேரணி பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றது.


Watch – YouTube Click

What do you think?

அமமுக திருச்சி வேட்பாளர் செந்தில்நாதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

வாய்பேச்சில் ஆரம்பித்து வாக்குவாதத்தில் முடிந்த நாகை வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்