in

அமமுக திருச்சி வேட்பாளர் செந்தில்நாதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்


Watch – YouTube Click

திருச்சி லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், வேட்பாளராக போட்டியிடும் செந்தில்நாதன், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதன் பின், அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது தேர்தல் சுற்றுப்பயணம் திட்டத்தை தயார் செய்வதற்கு 12 நாட்கள் தேவைப்பட்டது. திருச்சி தொகுதியில் எம்.பி.,யாக இருந்தவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக செய்யத் தவறிய திட்டங்கள் என்னென்ன என்பது மக்களுக்கு தெரியும். தற்போது, முதல் கட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. தலைவர்களின் தேர்தல் வாக்குறுதிகளோடு இறுதிக்கட்ட தேர்தல் அறிக்கை, வரும் 12ம் தேதி வெளியிடப்படும்.

கடந்த 20 ஆண்டுகளாக இருந்தவர்கள் எம்.பி., வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், பொதுமக்கள் நேரடியாக அவர்களை சந்திப்பது முடியாத காரியமாக இருந்தது. என்னை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், பார்லிமென்ட் கூட்டம் நடைபெறும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில், தொகுதியில் இருந்து, மக்கள் பணி மேற்கொள்வேன்.

மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்பதற்காக, லோக்சபா தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதியிலும் அலுவலகம் அமைத்து, மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பாக கந்தர்வகோட்டை போன்ற பின்தங்கிய பகுதிகளில் 10 ஆயிரம் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால், பசுமை பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பசுமைப் பூங்காவை அழித்து, மார்க்கெட் கட்டிடங்கள் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதை தடுத்து, பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.

துாய்மை நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் திருச்சியை, முதலிடத்திற்கு கொண்டு வருவேன். நகரை தூய்மையாக வைத்திருக்கும் துாய்மை பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
திருச்சியில், பாய்லர் தொழிற்சாலை, ஓ.எப்.டி., ரயில்வே பணிமனை போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. மத்திய அரசின் உதவியோடு பல மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தமிழர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், கொண்டு வரப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருச்சி பால்பண்ணை முதல் திருவெறும்பூர் வரை உயர்மட்டப்பாலம் அமைக்கப்படும். புலம் பெயர் தொழிலாளர் நல மையம் அமைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். திருச்சி– பெங்களூரு, வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும். புதுக்கோட்டை– பெங்களூரு கோயம்புத்துார் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும். திருச்சியை இரண்டாவது தலைநகராக்கி, அதிகார பகிர்வு செய்யப்படும். காவிரி ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து, நீர் ஆதாரத்தை பாதுகாப்பதோடு, குடிநீர் தட்டுப்பாடு போக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி– குண்டாறு– வைகை இணைப்பு திட்டத்தில், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாரபட்சம் இன்றி நிலம் கையகப்படுத்தி இணைப்பு திட்டம் விரைவுபடுத்தப்படும். மணல் கொள்ளையை தடுத்து, காவிரி ஆறு பாதுகாக்கப்படும், என்பன போன்ற வாக்குறுதிகளை தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

வாக்கு சேகரித்தபோது வாக்குவாதம் செய்த இளைஞர் காரில் ஏறிய பின் ஆவேசமாக இறங்கிய ஜோதிமணி

7000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணியில் உலக சாதனை