ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் பிரதோஷ சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள அருள்மிகு பர்வதவர்த்தினி உடனாய ஜலகண்டேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு அர்ச்சனைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.