மருது பாண்டியர்களின் 225ஆம் ஆண்டு குருபூஜை விழா முத்துராமலிங்க தேவரின் 119ஆம் ஆண்டு ஜெயந்தி விழா 64வது குருபூஜை முன்னிட்டு
மருது பாண்டியர்களின் 225ஆம் ஆண்டு குருபூஜை விழா,முத்துராமலிங்க தேவரின் 119ஆம் ஆண்டு ஜெயந்தி விழா 64வது குருபூஜை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் மாபெரும் இரத்ததானம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட தேவர்களின் பக்தர்கள் சார்பாக ராம்குமார் தலைமையில் ஜோதி,பிரேம்குமார்ஜோதி, அருண்குமார் தாஸ்,சந்தோஷ் குமார்,
கௌதம்,சுதர்சன்,நிவாஸ்,சக்தி,முருகன் மதுரை முருகன்,உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆர்வமாக வந்து பங்கேற்று இரத்ததானம் வழங்கினர். இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

