in

சங்கரன்பந்தல் அருகே தாமதமாகும் பணி நெடுஞ்சாலைதுறை துரிதப்படுத்த பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை:-

சங்கரன்பந்தல் அருகே தாமதமாகும் பணி நெடுஞ்சாலைதுறை துரிதப்படுத்த பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன்பந்தல் பொறையார் நெடுஞ்சாலையில் வீரசோழன் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்காலில் சாலை விரிவாக்க பணி மற்றும் வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த பல மாதமாக நடைபெற்று வருகிறது .

சாலை ஓரத்தில் வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைப்பதற்காக சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறை மூலம் கான்கிரீட் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர் தற்பொழுது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனாலும் பணியின் போது சேறும் சகதியாக சாலைகள் இருப்பதால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது மேலும் இந்த பணி கடந்த பல மாதமாக மந்த நிலையில் நடைபெற்று  வருவதாகவும் உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

வரத்துக்கால் அடைப்பால் விவசாயம் பாதிக்கும் அபாயம்!

மத்திய அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகிறார் ஞானேஷ் குமார்: திண்டுக்கல்லில் வைகோ குற்றச்சாட்டு