குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.அப்பர்,சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் ஸ்தலமான இக்கோவில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக அன்னாபிஷேகத்தை முன்னிட்டு உக்தவேதீஸ்வருக்கு
பால்,பன்னீர்,தேன்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னம்,காய்கறி, பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னாபிஷேக அன்னதானம் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

