in

டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர் சம்மேளனம் சார்பாக ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர் சம்மேளனம் சார்பாக ஆர்ப்பாட்டம்

 

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர் சம்மேளனம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில வாணிப கழகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
இரண்டு ஆண்டு காலமாக கூலி வழங்கப்படாமல் அனைத்து மதுபான பெட்டிகளையும் ஸ்கேனிங் செய்து வருகின்ற வேலைக்கு டாஸ்மாக் நிர்வாகம் ஏற்றுக் கொண்ட படி கூலியை நிர்ணயித்து வழங்கிட வேண்டும்,

குடோன் சுமை பணி தொழிலாளர்களுக்கு மதுபான பெட்டிகளை கடைகளுக்கு அனுப்பிட ஏற்றுக்கூலி ரூ.5 என்பதை டெண்டர் விதிகளில் குறிப்பிட வேண்டும், ESI, PF சட்டப்படி அனைவருக்கும் பிடித்தும் செய்வதை முறைப்படுத்தி அமல்படுத்த வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

தமிழ் சங்கமம் விரைவு வண்டியில் 20 கிலோ குட்கா பறிமுதல்

கண்ணப்ப நாயனார் திருக்கோலத்தில் கபாலீஸ்வரி அம்மன்!