in

மதுராந்தகம் தனியார் பள்ளியில் விருட்சம் என்ற தலைப்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி


Watch – YouTube Click

மதுராந்தகம் தனியார் பள்ளியில் விருட்சம் என்ற தலைப்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி

 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் விருட்சம் என்ற தலைப்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் லோகராஜ் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் மங்கையர்க்கரசி அனைவரையும் வரவேற்றார்.

பள்ளி முதல்வர் திலகவதி ஆண்டறிக்கை வாசித்து அனைவரும் வரவேற்றார்.

இதில் திரைப்பட நடிகர் அஜய் ரத்தினம், வழக்கறிஞர் சீதாராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், அரசு பொதுத்தேர்வுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு தங்க மோதிரம் ஊக்கத் தொகையும், ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தொகை மற்றும் விருது வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் வண்ண உடையடைந்து பரதநாட்டியம், கிராமிய நடனம், நாடகம் குழு பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அசத்தினர் இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களும் பொதுமக்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி முடிவில் துணை முதல்வர் கீதா நன்றி கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

பள்ளி வகுப்பறை கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்

அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய ரஷ்மிகா மந்தனா