in

காவிரி கடைமடை நாகையில் ஆடிப்பெருக்கு களையிழப்பு

காவிரி கடைமடை நாகையில் ஆடிப்பெருக்கு களையிழப்பு

 

காவிரி கடைமடை நாகையில் ஆடிப்பெருக்கு களையிழப்பு – தண்ணீரின்றி வாட்டர் பாட்டிலில் வழிபட்ட விவசாயிகள்

காவிரி கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில், தமிழர்களின் முக்கிய பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கு இந்த ஆண்டு முற்றிலும் களையிழந்து காணப்பட்டது.

டெல்டா மாவட்டங்களின் இரண்டாவது பெரிய பாசன ஆறான கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. வழக்கமாக காவிரி நீர் கரைபுரண்டு ஓடும் இந்த ஆற்றில் தற்போது ஒரு துளி நீர்கூட இல்லாத நிலையில், விவசாயிகள் ஆற்றின் கதவனைக்கு விளக்கேற்றி, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வைத்து, மாலை அணிவித்து வழிபட்டு அரசுக்கு நூதன முறையில் தங்கள் எதிர்பை பதிவு செய்தனர்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளில் குறுவை சாகுபடி முழுமையாக பொய்துபோனது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். வயல்கள் வறண்டு கிடப்பதால், விழாவிற்கான உற்சாகமும் இல்லாமல் போனது.

ஆடிப்பெருக்கு வழிபாட்டை முடித்த விவசாயிகள், ஆற்றங்கரையில் கூடி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தராத கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். கருப்பு கொடிகளை ஏந்தியபடி “காவிரி நீர் எங்கள் உரிமை”, “சம்பாவை காப்பாற்று” என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஆடிப்பெருக்கு என்றாலே காவிரியில் வெள்ளம் பாய்ந்து, மஞ்சள், குங்குமம், புத்தாடை அணிந்து கொண்டாடுவோம். ஆனால் இன்று குடிப்பதற்கே தண்ணீர் இல்லை. வாட்டர் பாட்டில் தண்ணீரை வைத்து ஆற்றை வணங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

உடனடியாக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், நாகை மாவட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசை வலியுறுத்தினர்.

தண்ணீர் இன்றி விவசாயமும் பண்டிகையும் கேள்விக்குறியாகியுள்ள நிலை காவிரி கடைமடை விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

நடிகர் தனுஷ் தனது மகனுடன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்…..

நெல்லை தாமிரபரணி ஆற்றில் புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு