in

சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி


Watch – YouTube Click

புதுச்சேரியில் சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் வைப்பதை வியாபாரிகள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக் கொண்டுள்ளார்

சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா கம்பன் கலை அரங்கில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம்ஆகியோர் கலந்து கொண்டு போக்குவரத்து துறைக்கான பிரத்யோகமான செயலியை வெளியிட்டனர். தொடர்ந்து சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்கள் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி….

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும்என்றும் மிதமான வேகத்தில் செல்லும்போழுது விபத்துக்களை தவிர்க்கலாம் என்று குறிப்பிட்டார்.

மேலும் சாலைகளை மேம்படுத்தும் போது வேகத்தடைகள் அமைக்கப்படுகிறது அதனை அடையாளம் தெரியும் அளவிற்கு அமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்று கூறினார்.

போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியை பொறுத்த அளவுக்கு வியாபாரமே சாலையில் தான் நடக்கிறது எனவே சாலை ஓரங்களில் உள்ளவர்கள் சாலைகளில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து பள்ளிகளிலே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இதனால் விபத்துகளையும் தவிர்க்க முடியும் என்று தெரிவித்தார்.

விழாவில் போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

47ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம்

தவக்காலம் இன்று துவங்கி, 40 நாள்களுக்கு கிறிஸ்துவர்கள் நோன்பு