in

பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை பராமரிப்புப் பணிகள் நிறைவு!

பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை பராமரிப்புப் பணிகள் நிறைவு!

 

பழனி முருகன் கோவில்: பராமரிப்புப் பணிகள் நிறைவு! ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்​

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், மலைக்கோவிலுக்குச் செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் ரோப் கார் சேவை, பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

​பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் ரோப் கார் ஆகிய வழிகளைப் பயன்படுத்தி மலைக்கோவிலுக்குச் சென்று வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்களில் பெரும்பாலானோர் ரோப் கார் சேவையையே விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.

​பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரோப் கார் சேவையானது மாதம் ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

​அந்த வகையில், 45 நாட்கள் நடைபெற்ற வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து ரோப் கார் சேவை பயன்பாட்டிற்கு வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பப் பழுது காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டது.

​தற்போது பழுதுநீக்கும் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

What do you think?

ஓமனில் தவித்த புதுச்சேரி பெண் பத்திரமாக மீட்பு

ஓமனில் 2 மாதங்களாக தவித்த புதுச்சேரி பெண் மீட்பு! முதலமைச்சர் ரங்கசாமிக்கு கண்ணீர் மல்க நன்றி!