வேல் வடிவங்களில் தங்க நகைகள் அறிமுகம் – புதிய நகைக்கடை திறப்பு விழா
பழனியில் முருகனின் 108 வகையான வேல் வடிவங்களில் தங்க நகைகள் அறிமுகம் – புதிய நகைக்கடை திறப்பு விழாவில் விற்பனை தொடக்கம்!
பக்தர்களின் ராசிக்கு ஏற்ப வேல் வடிவங்களில் மோதிரம், காப்பு, டாலர் உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் தயாரிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலைய சாலையில் ஒரிஜினல் வாசுவி தங்க மாளிகையின் புதிய நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகர் கலந்து கொண்டு நகை விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதிய கடை திறப்பு விழாவை முன்னிட்டு பழனி முருகனின் 108 வகையான வேல்களை மையமாகக் கொண்டு பிரத்யேக தங்க ஆபரணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

குறிப்பாக, பக்தர்களின் ராசிக்கு ஏற்ப வேல் வடிவங்கள் தேர்வு செய்யப்பட்டு, சக்தி, செயல், வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் குறிக்கும் 108 வகையான வேல் வடிவங்களில் தங்க மோதிரங்கள், காப்புகள் மற்றும் சிறியது முதல் பெரியது வரையிலான வேல் டாலர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி போன்ற புகழ்பெற்ற ஆன்மிகத் தலத்தில் புதிய நகைக்கடையைத் திறந்தது பெருமையாக இருப்பதாகவும், முருக பக்தர்களைக் கவரும் வகையில் 108 வேல் வடிவ தங்க ஆபரணங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


