in

நாங்கள் ராஜா ராணி வேறு கட்சிக்கு நாங்கள் வேறு கட்சிக்கு போய் பிச்சை எடுக்கவேண்டும்


Watch – YouTube Click

நாங்கள் ராஜா ராணி வேறு கட்சிக்கு நாங்கள் வேறு கட்சிக்கு போய் பிச்சை எடுக்கவேண்டும்

 

அதிமுகவில் நாங்கள் ராஜாவாகாவும் ராணியாகவும் இருக்கும் பொழுது நாங்கள் வேறு கட்சிக்கு போய் பிச்சை எடுக்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேச்சு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் முன்னால் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் கோகுல இந்திரா கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி _

பொய்யான வாக்குறுதிகள் மூலம் பிரச்சாரம் செய்து திமுக ஆட்சியை பிடித்துள்ளது. மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை –

மக்கள் பயன் பெறும் பல்வேறு திட்டங்களை தொடங்கியது அதிமுக –

மக்கள் திட்டங்களை ஒரே கையெழுத்தில் முடக்கியவர் ஸ்டாலின் .

நீட்ரத்து செய்யபடும் என வாக்குறுதி கொடுத்து மாணவர்களை ஏமாற்றி வருகிறது திமுக –

அதிமுக ஆட்சியில் பிறந்த பிள்ளைகள் மிகுந்த அதிஷ்டசாலிகள் –

2015 வெள்ளத்தில் மக்களுக்கு முழு உதவியும் வழங்கியவர் ஜெயலலிதா –

கடந்த சில மாதம் முன் சென்னை வெள்ளத்தை 10 நாட்களாகியும் அமைச்சர், கவுன்சிலர் கூட யாரும் செல்லவில்லை – எடப்பாடியார் சென்ற பின் தான் அமைச்ச்ர்களே பணியை தொடங்கினர் –

நீட்டை ரத்து செய்வோம் என திமுகவினர் வருவார்கள் மக்கள் ஏமாற வேண்பாம் –

மீண்டும் மீண்டும் தவறு செய்தால் தமிழ்நாடு தாங்காது –

ஆடம்பர ஆட்சி செய்யும் ஆட்சியாக உள்ளது திமுக எனவும் பேசினார்.

அதை தொடர்ந்து முன்னால் அமைச்சர் கோகுல இந்திரா
பேசுகையில் –

2 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக ஆட்சியை இழந்தது –

கேடி ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு மிகவும் அவமதித்தனர்-

ஜெயலலிதா என்ற வர் நம்மிடம் இல்லை என்றால் அதற்கு காரணம் திமுகவினர் . பொய் வழக்குகள் போட்டு அம்மாவை முடக்கினர் –

அம்மாவின் மரணத்துக்கு பின் நினைவிடம் கட்ட திமுகவின் தூண்டுதல் பேர் வழக்கு போடபட்டது.

பிஜேபி யில் ராஜேந்திர பாலாஜி இணைகிறார் என தொடர்ந்து வதந்தி பரவியது நாளடைவில் நானும் மாற்று கட்சியில் இணைகிறேன் என வதந்தி பரப்பி வருகின்றனர்.

அதிமுகவில் ராஜா ராணியாக இருக்கும் பொழுது நாங்கள் வேறு கட்சிக்கு போய் பிச்சை எடுக்கவேண்டும் –

பிஜேபியுடனான கூட்டணி சுமூகமாக சென்ற நிலையில் அரசியல் கத்துகுட்டியாக உள்ள ஒரு கட்சி மாநில தலைவர் அண்ணா மற்றும் அம்மாவை விமர்சித்தால் எப்படி ஏற்று கொள்வது –

அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது – அதிமுக ஆட்சியில் ஒரு மந்திரி கூட காவல்துறை விவகாரத்தில் தலையீட்டில் இருந்தது கிடையாது –


Watch – YouTube Click

What do you think?

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இடையே பலத்த போட்டி

நாகூர் அருகே கடையில் திடீர் தீ விபத்து 2 மணி நேரம் போராடி அனைத்தனர்