in

தஞ்சையில் ஜெயிலர்-2 திரைப்படம் வெளியீடு

தஞ்சையில் ஜெயிலர்-2 திரைப்படம் வெளியீடு

 

தஞ்சை மாவட்டத்தில் ஜெயிலர்-2 திரைப்படம் வெளியீடு உலக சரித்திரத்திலேயே 18 திரையரங்குகளில் இன்று 5 காட்சிகள் என 85 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது.

எங்கள் சூப்பர் ஸ்டார் அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த ஜெயிலர்-2 திரைப்படம் இன்று சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்களுடைய நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. உலகமெங்கும் மாபெரும் வெற்றியை பெற்றுக் கொண்டிருக்கிறது

ரஜினிகாந்த் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து பட்டாசு வெடித்து குத்தாட்டம் போட்டு தஞ்சை ஸ்ரீபதி திரையரங்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரையில் வெளியாகி உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தினை வரவேற்று ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. ரஜினிகாந்த் அவர்களை சிற்பி போல செதுக்கி இருக்கின்றார் இயக்குனர் நெல்சன் அவர்கள். அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி என தஞ்சை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினி கணேசன் தெரிவித்தார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

இந்த நிகழ்ச்சியை தஞ்சையிலே உள்ள விஜய் ரசிகர் நற்பணி மன்ற இயக்கங்கள், அஜித் ரசிகர் மன்றங்கள், கமல்ஹாசன் நற்பணி மன்ற இயக்கங்கள், சிம்பு, சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இந்த படத்தை வெற்றி விழாவாக்குவதற்கு வந்திருக்கின்றார்கள்.

இந்தியாவிலேயே ஒற்றுமையுடன் செயல்படக்கூடிய அனைத்து நடிகர்களின் கூட்டமைப்பு சங்கம் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே இருக்கிறது என்பது பெருமைக்குரியது.

தஞ்சாவூரில் மட்டும் உலக சரித்திரத்திலேயே 18 திரையரங்குகளில் இன்று 5 காட்சிகள் என 85 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. குறைந்தது 45 ஆயிரம் பேர் இன்று ஒரு நாள் மட்டும் தஞ்சை மாநகரிலே படத்தை பார்க்கின்றார்கள்.

தஞ்சையில் 5 திரையரங்குகளிலும், பட்டுக்கோட்டையில் 3 திரையரங்குகளிலும், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், ஒரத்தநாடு உள்ளிட்ட இடங்களிலும் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இது மாபெரும் வெற்றிப் படமாக அமையும்.

அதனுடைய சரித்திரத்தின் பிள்ளையார் சுழியை இன்று தஞ்சையில் இருந்து உலகமெங்கும் போடுவார்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.

What do you think?

High Multiplier Pokies: A Decision Guide for Australian Players

தேனியில் ஜெயிலர்2 படம் ஆரவாரத்துடன் கொண்டாடிய ரசிகர்கள்