in

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா

 

தஞ்சை பெரிய கோவில் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா – பந்தக்கால் நடும் பணிகள் சுற்றுச் சுவர் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்.

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோவிலில் வருகிற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் சதய விழாவிற்கான பந்தக்கால் நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 22-ம் தேதி அரசு சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

 

இதனை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

சதய விழாவை முன்னிட்டு வருகிற 22ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

அரசு விழாவா? தவெக கட்சி விழாவா?