உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் மஹாநந்தியம் பெருமான் அபிஷேகம்
பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மஹாநந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, பெரியகோவிலில் மகாநந்தியம் பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும்.
அதைப் போல் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் வீற்றிருக்கும் மஹா நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவு பொடி, மஞ்சள், தேன், பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம் பெருமான் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.

பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம், ஆகையால் இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

