in

வைத்தியலிங்கத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தேர்தல் பரப்புரை


Watch – YouTube Click

வைத்தியலிங்கத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தேர்தல் பரப்புரை

 

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் திமுக உட்பட கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது மற்றும் திறந்தவெனில் பிரச்சாரம் செய்வது என தொடர்ந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளையும் தற்பொழுது ஆளும் மத்திய மாநில அரசின் மக்கள் விரோத செயல்கள் குறித்தும் எடுத்துக் கூறி கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பழனி திமுக பொதுக்குழு உறுப்பினர் சரவணன் என்கிற ஆறுமுகம் நெல்லிதோப்பு தொகுதி திமுக பொறுப்பாளர் கார்த்திகேயன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

ஜோசியம் பார்த்த வேட்பாளர் ஜோசியரை கைது செய்த வனத்துறை

நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு ‘”செக்”