in

இப்படியெல்லாமா பணம் சம்பாதிப்பீர்கள்? அனிதா சம்பத்தை வறுத்தெடுத்த நெடிசன்கள்

இப்படியெல்லாமா பணம் சம்பாதிப்பீர்கள்? அனிதா சம்பத்தை வறுத்தெடுத்த நெடிசன்கள்

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் பணியை தொடங்கிய அனிதா சம்பத் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானார்.

இவருக்கு ’ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஆனால் தற்பொழுது அவர் செய்த ஒரு செயலால் அவர் ரசிகர்களே அவர் மேல் செம காண்டில் இருக்கிறார்கள்.

அனிதா சம்பத் நியூஸ் 7 மற்றும் பாலிமர் சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.

பிறகு சன் டிவியில் அடி எடுத்து வைத்தார் அதன் பிறகு சில திரைப்படங்கள் மற்றும் விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கலில் தலை காட்டிய அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் விஜய் டிவியில் ஒரு சில சீரியல்களில் தலை காட்டினார். இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்து இருக்கிறார். அதில் அடிக்கடி பல வீடியோக்களை வெளியிட்டு லைக்சை அள்ளுபவர் சமீபத்தில் தன் வீட்டு கிரகப்பிரவேசம் தொடங்கி தான் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தான் தற்போது ரசிகர்களிடையே பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. இவர் சமீபத்தில் அந்தமானுக்கு சுற்றுலா சென்று அங்கிருந்து வீடியோக்களை எடுத்து YouTube சேனலில் பதிவிட்டுள்ளார்.

அதனைப் பார்த்த நெட்டிசன்கள் தற்பொழுது இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையே பல பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கிறது.

மாலத்தீவில் இருக்கும் இந்தியர்களே வெளியேற்ற வேண்டும் என்று மாலத்தீவு அதிகாரிகள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் மாலத்தீவுக்கு இந்தியர்கள் யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெரிந்தும் அனிதா சம்பத் மாலத்தீவுக்கு சென்று பல வீடியோக்களை தனது Youtube பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இவருக்கு சம்பாதிக்க வேறு வழியே இல்லையா? இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டுமா? என்று நெட்டிசன்கள் இவரை திட்டுவதோடு இவர் போன்ற பிரபலங்கள் செய்யும் தவறுகளால் மற்றவர்களும் இவர்களை பின்பற்றி தவறுகள் செய்யும் வழியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

எனவே இது போன்ற தவறுகளை இனியாவது பிரபலங்கள் செய்யாமல் இருந்தால் இவர்களை பின்பற்றுபவர்களுக்கு நன்மை ஏற்படும் என்பதை அனிதா சம்பத் புரிந்து கொள்வாரா?

What do you think?

தன் மகளை காப்பாற்ற கட்சியை விற்று விட்டார் சரத்குமார்…. கொந்தளிக்கும் கட்சி உறுப்பினர்கள்

இன்று வெளியாகும் விடாமுயற்சி First லுக்…. இப்போது… ஆவலுடன் ரசிகர்கள்