in

இன்று வெளியாகும் விடாமுயற்சி First லுக்…. இப்போது… ஆவலுடன் ரசிகர்கள்

இன்று வெளியாகும் விடாமுயற்சி First லுக்…. இப்போது… ஆவலுடன் ரசிகர்கள்

 

மகிழ் திருமேனி எப்பொழுது மகிழ்ச்சியான செய்தியை கூறுவார் என்று அவர் வாய் பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு விடாமுயற்சி பற்றிய சூப்பர் அப்டேட் ஒன்றை இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.

விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்க கதாநாயகனாக அஜித்தும் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

வில்லனாக அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லைக்கா ப்ரொடக்ஷனில் அனிருத் இசையமைகிறார்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டதை அடுத்து தற்பொழுது மீண்டும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு ஷூட்டிங் தொடங்கிய நிலையில் அஜித்திற்கு அறுவை சிகிச்சை காரணமாக படத்தின் படப்பிடிப்பு மேலும் தாமதம் ஆகியது.

அடுத்தடுத்து தடங்கல் ஏற்படுவதால் ரசிகர்களிடையே படத்தின் மீது அதிர்ப்தி ஏற்பட்டு விட கூடாது என்று மகிழ்திருமேனி ரசிகர்களுக்கு ஒரு Surprise கொடுக்க போகிறாராம்.

இதனால் படத்தின் அப்டேட் எதையும் வெளியே விடாமல் சீக்ரெட் maintain பண்ணிய மகிழ்திருமேனி விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பரவியுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மார்ச் 14ஆம் தேதியான இன்று வெளியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் அஜித் நடித்த வலிமை, துணிவு ஆகிய படத்தின் அப்டேட்களும் முன்னறிவிப்பு எதுவும் இன்றி வெளியிடப்பட்ட நிலையில் விடாமுயற்சியின் first லுக்கும் அப்படிதான் வெளியிட போகிறார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

What do you think?

இப்படியெல்லாமா பணம் சம்பாதிப்பீர்கள்? அனிதா சம்பத்தை வறுத்தெடுத்த நெடிசன்கள்

டீ கடை உரிமையாளரை தாக்கிய 4 பேர் கைது