in

தமிழக சட்டசபையில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் தவறு அவர் சில கருத்துகளை சொல்லி இருக்கக் கூடாது


Watch – YouTube Click

தமிழக சட்டசபையில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் தவறு அவர் சில கருத்துகளை சொல்லி இருக்கக் கூடாது

கிளாம்பாக்கம் பேருந்து நிலையமாக இருந்தாலும் ஆளுநர் உரையாக இருந்தாலும் நாங்கள் செய்வதுதான் சரி என்ற போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன்..

ஜிப்பர் மருத்துவமனையில் மருந்து இலவசமாக கிடைத்தாலும் சில மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடையலாம் என்று வித் அவர் மேலும் ஆண்டு ஒன்றுக்கு மருந்துகள் வாங்குவதால் 7500 கோடி மக்கள் பணம் மிச்சமாகிறது என்றார் .

ஜிப்மர் மருத்துவ சேவை செய்வதில் சிறந்த மருத்துவமனையாக உள்ளது என்ன குறைபாடுகள் இருந்தால் தன்னை நேரடியாக சந்தித்து குறைகளை சொல்லலாம் என்று குறிப்பிட்டார்.

தமிழக அரசு எதையுமே செய்யாது என்பதற்கு உதாரணம் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், குளிப்பதற்கு பயணிகள் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் அரசியலில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆளுநர் உரை முடிந்தவுடன் தேசிய கீதம் இசைத்து விட்டு ஆளுநரை வழி அனுப்ப வேண்டும் இதுதான் முறை ஆனால் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்ட விதம் தவறு அவர் சில கருத்துக்களை சொல்லி இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

தெலுங்கானாவில் ஆளுநர் உரை வாசிக்க அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள் ஆனால் ஆளுநர் உரையை வாசிக்க விடாத அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையமாக இருந்தாலும் சரி சட்டசபையில் ஆளுநர் உரையாக இருந்தாலும் எங்களை யாரும் எதுவும் கேட்கக்கூடாது நாங்க செய்வதன் சரி என்ற போக்கை ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் போட்டியிடப் போகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை…அது வதந்தி! வதந்தீ! வதந்தீ! என்று மூன்று முறை குறிப்பிட்டார்.

மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவே எந்த வித குறைபாடும் ஜிப்மரில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் உடன் இருந்தார்.


Watch – YouTube Click

What do you think?

வாழ்த்தியவர்களுக்கு நன்றி பிரிட்டன் மன்னர் சார்லஸ்

தீ விபத்தில் தரைமட்டமான கூரை வீடு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்