in

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


Watch – YouTube Click

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் எதிரே சட்ட மாமேதை டாக்டர் பாபாசாகேப் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு விடியல் சட்ட மையம் சார்பில் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

வெகு விமர்சையாக நடைபெற்ற அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவில் இளைஞர்கள் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் விஜய், நாகராஜ், வினோதினி, அத்திமூர் மணி, குன்னத்தூர் தமிழரசன், சிவராஜ்நகர் அஜய், செல்வம் பேட்டை ஜான், ஞானசேகர், சார்லஸ், ரமேஷ், அவினாஷ், விஷ்ணு, அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பிரச்சார வேனில் தூங்கி விழுந்த நத்தம் விஸ்வநாதன்

தந்தை உங்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவார் – மகள் தீவிர வாக்கு சேகரிப்பு