in

அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா

அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா

வந்தவாசி, ஆக.6- வந்தவாசி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனை யில்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி தலைமையில் கொண்டாடப்பட்டது. டாக்டர் சிவப்ரியா முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எக்ஸ்னோரா மலர் சாதிக், கற்க கசடற பாஸ்கரன் தாய்ப்பால் குழந்தைகளுக்கு வரும் நன்மை குறித்தும் தாய்ப்பாலின் சிறப்புகள் குறித்தும் தாய்ப்பால் ஊட்ட வேண்டிய அவசியம் குறித்தும் பேசினர்.

நிகழ்ச்சியில் தெள்ளூர் ஏ ஏ பி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு வில்லுப்பாட்டு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினர்.

சமூக சேவகர் மு.பிரபாகரன், செவிலியர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் மற்றும் ஏஏபி நர்சிங் கல்லூரி மாணவிகள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அபிராமி நன்றி கூறினார்.

What do you think?

மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்து மோசடி

அவதானபட்டி மாரியம்மன் திருக்கோயில் ஆடித்திருவிழா