in

ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி


Watch – YouTube Click

ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி

 

இந்திய நாட்டுக்கு ஜனநாயகத்துக்கும் பாசிஷத்துக்குமான தேர்தல். அடித்தட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை வழங்கும் அரசியல் இயக்கங்களுக்கும் மதவாதத்தால் மக்களை பிளவுபடுத்தும் அரசியல் இயக்கத்துக்குமான தேர்தல். தமிழகத்தில் 3 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிககளில் 25 சதவீதம் நிறைவேற்றி உள்ளார்.

மத்திய அரசு தமிழகத்துக்குரிய நிதியை வழங்காவிட்டாலும், கடுமையான நிதி நெருக்கடியில் மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத்திட்டம் போன்ற கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. உலக முதவீட்டாளர் மாநாடு நடத்தி ஒரு லட்சம் கோடிக்கும் மேலாான அந்நிய முதலீடுகளை தமிழகத்துக்கு கொடு வந்து 30 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளார். பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் தமிழக அரசுக்கு, மத்திய பா.ஜ., அரசு இடையூறாக இருக்கிறது. புயல் மழை வெள்ளத்தால் 37 ஆயிரம் கோடி தனிநபர் மற்றும் அரசு சொத்துக்கள் நாசமானது.

மத்திய அரசின் குழுவும் மழை வெள்ள சேதத்தை பார்வையிட்டனர். சில வாரங்களில் நிவாரண நிதி வழங்குவதாக அமித்ஷா உறுதியளித்தார். ஆனால், ஒரு பைசாக் கூட வரவில்லை, ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கியது தமிழக அரசு. மத்திய அரசின் திட்டங்களுக்கும் நிதி அளிப்பதில்லை. மெட்ரோ ரயில் 2வது திட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி வழங்கவில்லை. திட்டத்தில் தொய்வு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு 9 ஆயிரம் கோடி ஓதுக்கியது. அடுத்து 12 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இவ்வளவு நிதி நெருக்டியிலும் முடிந்தவரை தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசுக்கு கவர்னர் வாயிலாக இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னரை வைத்து இடையூறு செய்கின்றனர். மீண்டும் மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்து விடக் கூடாது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, இஸ்லாமியர்கள் வருகைக்கு தடை விதித்துள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அந்த சட்டத்தை திரும்பப் பெறப்படும், என்று ராகுல், ஸ்டாலின் ஆகியோர் கூறியிருக்கின்றனர். இண்டியா கூட்டணி அறிக்கையில் இடம் பெற்றதைத் தான் முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். நாங்கள் வெற்றி பெறுவதற்கு, தேர்தல் அறிக்கை ஒன்றே போதும். பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்டு பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

ஓடு தளம் நீட்டிப்பு பணி முடிந்தால் தான், அதை முழுமையாக பயன்படுத்த முடியும், என்று விமான நிலை அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகரங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் கொண்டு வர என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வேன். பொதுத் துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை தொய்வு நிலையில் இருப்பதால், நிறைய பேர் வேலை இழந்துள்ளனர். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதை மீண்டும் லாபகரமான நிலைக்கு கொண்டு வரவும், நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கவும் முயற்சி செய்வேன்.

தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் போது, பொன்மலை ரயில்வே பணிமனையில் அதற்கான கோச்கள் தயார் செய்யும் பணியை கொண்டு வரும் திட்டமும் இருக்கிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருப்பதால், சக்தி வாய்ந்த அமைச்சர்கள் வாயிலாக மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. என்னால் செய்ய முடியாததை செய்வேன் என்று சொல்ல முடியாது. மிகைப்படுத்தி பிரச்சாரம் இருக்காது.

சராசரி அரசியல்வாதி போல், அதை செய்வேன்; இதை செய்வேன் என்று சொல்ல மாட்டேன். நாடாளுமன்ற உறுப்பினர் வரம்புக்கு உட்பட்ட பணிகளை செய்வேன். மீண்டும் ஆட்சிக்கு வருவதாக கூறும் பா.ஜ.,வுக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை. எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் மீது தான் நம்பிக்கை உள்ளது. இவர்களே முடிவு செய்து, தேர்தல் ஆணையம் உறுப்பினர் இருவரை நியமனம் செய்துள்ளனர். அதனால், தேர்தல் ஆணையமும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற முடியும், என்று நினைக்கலாம். ஆனால், மக்கள் ஆதரவுடன் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இண்டியா கூட்டணியில் இருந்த ஒரு சிலர் தவிர, கூட்டணி நன்றாக, வலுவாக உள்ளது. கவர்னருக்கு வானளாவிய அதிகாரம் கிடையாது. இந்திய அரசியல் சாசன சட்டப்படி, ஒரு மாநில அரசின் முதல்வர் யோசனைப்படி தான் கவர்னர் செயல்பட வேண்டும். ஆனால், தமிழக கவர்னர் ஆர்.எஸ்.எஸ்.,சின் கொள்கைப்பரப்பு செயலாளராக செயல்படுகிறார். அதனால், கவர்னர் பற்றிய கேள்விகளை தவிர்த்து விடுங்கள். பா.ஜ., ஆட்சியில் இல்லாத கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில், கவர்னரை வைத்து மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக திட்டமிட்டு இதே போல் பிரச்னை செய்து கொண்டிருக்கின்றனர். அதை பொருட்படுத்த வேண்டாம். ம.தி.மு.க., பொருத்தவரை ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்.


Watch – YouTube Click

What do you think?

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பயிற்சிப்பட்டறை

எனது படங்களின் வெற்றியை நான் கொண்டாட விட்டதில்லை… Samantha