in

ஆடுஜீவிதம் ஆஸ்கார்…ருக்கு தகுதியான படம்…


Watch – YouTube Click

ஆடுஜீவிதம் ஆஸ்கார்…ருக்கு தகுதியான படம்…

பல வருடங்கள் கழித்து மலையாளத்தில் வெளியான படம் சூப்பர் டுபேர் ஹிட் அடித்தது மஞ்சுமெல் பாய்ஸ்.. அந்த படத்தின் வெற்றியின் தாக்கம் அடங்கரத்துக்குள்ள மேலும் ஒரு சூப்பர் ஹிட் படம் வெளியாகி தெலுங்கு தேசத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

மௌலி இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் ஹீரோவாக நடிக்க அமலாபால் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஆடு ஜீவிதம்’.

இது கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். கேரளாவை சேர்ந்த நஜீப் என்பவர் வேலைக்காக சவுதி அரேபியா செல்கிறார் அப்பொழுது பாலைவனத்தில் ஒரு கும்பல் இடம் சிக்கி இரண்டு ஆண்டுங்கள் அடிமையாக வாழ்ந்தவர் அங்கிருந்து எப்படி தப்பித்தார் என்கிற கதையை … தழுவி இயக்குநர் உணர்வுபூர்வமாக படத்தை எடுத்திருக்கிறார். (.மலையாள நாவலான ஆடுஜீவிதம் (goat days) என்ற நாவலை எழுதியவர் கோட் டேஸ் )

2008 ஆம் ஆண்டு ஆடு ஜீவிதம் கதையை படமாக்க மௌலி ஆரம்பித்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து தான் இப்படத்தின் சூட்டிங் தொடங்கி இருக்கிறார்.

இயக்குனர் ஏனென்றால் ஸ்கிரிப்ட் பணிகள் மட்டும் பத்து ஆண்டுகளாக நடந்ததாம் .இத்தனை ஆண்டுகளின் கடுமையான உழைப்புக்கு பிறகு நேற்று உலகம் எங்கும் இப்படம் ரிலீஸ் ஆனது 1400 திரையரங்குகளில் வெளியான இடம் தமிழகத்தில் மட்டும் 450 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தை தியேட்டரில் கண்ட ரசிகர்கள் தங்கள் கமெண்ட்களை twitter பக்கத்தில் தெரிவித்துள்ளனர்…. அதில் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும் பிரித்விராஜ் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் வெறித்தனமாக இருப்பதாகவும் மற்ற நடிகர்கள் நடிகர்களின் நடிப்பு அருமையாக இருந்தது என்றும் கூறியிருக்கின்றனர். மேலும் ஒரு விமர்சகர் ஆடு ஜீவிதம் படம் நிச்சயம் ஆஸ்கார் விருதுக்கு தகுதியுள்ள படம் அந்த அளவிற்கு பிரித்விராஜ் நடிப்பில் பின்னி இருக்கிறார்… நிச்சயம் இப்படம் வெற்றி பெரும் என்று கூறிஇருக்கிறார்..


Watch – YouTube Click

What do you think?

எதிர்நீச்சல் சீரியல்…அதிரடி திருபங்களுடன் தர்ஷிணி கல்யாணம்…விரைவில்

டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு