in

நாகையில் தீவிபத்தால் சேதம் அடைந்த வீட்டினை பார்வையிட்ட வேட்பாளர் கார்த்திகா


Watch – YouTube Click

நாகையில் தீவிபத்தால் சேதம் அடைந்த வீட்டினை பார்வையிட்ட வேட்பாளர் கார்த்திகா

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கீழதண்ணிலப்பாடி ஆற்றங்கரை தெருவில் திடீரென ஏற்பட்ட தீபத்தால் எட்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

தேர்தல் நேரம் என்பதால் இந்த துயர சம்பவம் அறிந்த நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நேரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திகா தீ விபத்திதல் பாதிக்கப்பட்ட எட்டு குடிசை வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது பாதிக்கப்பட்டவர்கள் எட்டு வீடுகளும் முற்றிலும் இருந்து நாசமாகிவிட்டதாகவும் உடுத்த உடை உண்ண உணவு தங்குவதற்கான இடம் போன்ற அடிப்படை வசதி கூட இல்லாமல் அல்லல் பட்டு வருவதாகவும் பல லட்சம் ரூபாய் இழந்து வாடும் எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர் அரசுக்கு உங்கள் வேதனையை எடுத்துரைத்து உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் தெரிவித்தார்.

அதேபோல் நாகை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே காடாம்படியில் பாஜக வேட்பாளர் வரவேற்பின் போது வெடித்த பட்டாசு தீப்பொறியால் ஏற்பட்ட தீபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசமானது பாதிக்கப்பட்ட வீட்டினை நேரில் பார்வையிட்டு உரிமையாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபு வாக்கு சேகரித்தார்

பாஜக ஆதரித்து காமெடி நடிகர் செந்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்