in

பாதையாத்திரை அண்ணாமலைக்கு சுகரை குறைக்குமே தவிர தேர்தலில் எடுபடாது


Watch – YouTube Click

பாதையாத்திரை அண்ணாமலைக்கு சுகரை குறைக்குமே தவிர தேர்தலில் எடுபடாது ; நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் பேட்டி

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் செய்யது முஹம்மது கலீபா சாஹிப்பின் இல்ல திருமண விழா தர்காவில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ் வி சேகர் கூறுகையில் ; நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் கட்டமைப்பை பலமாக வைத்திருக்கிறார் அதற்கு காரணம் அவருடைய தந்தை சந்திரசேகரன். அந்த கட்டமைப்பை அரசியல் கட்டமைப்பான மாற்றுவார் என்று நம்புகிறேன். அண்ணாமலை ஒரு போலீஸ் திருடர்களோடு பழகி பொய் சொல்ல கற்றுக்கொண்டார்.

தேர்தல் என்பது கூட்டணி பலம். அரசியல் அனுபவமே இல்லாத கத்துக்குட்டிதான் அண்ணாமலை. மக்களை மட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள பாஜக மேல்மட்ட தலைவர்களையும் அண்ணாமலை ஏமாற்றி வருகிறார். நூற்றுக்கு 150 மார்க் வாங்குவேன் என்று கூறும் படிக்காத வாய்சவடால் விடும் மாணவன் 2 மார்க் வாங்குவான் அதுபோல அண்ணாமலை பேசி வருகிறார் மே மாதம் தெரிந்துவிடும். ஒருநாளைக்கு ஒன்றரை கிலோமீட்டர் நடக்கும் அண்ணாமலை மேற்கொண்ட பாதையாத்திரை அவருக்கு சுகரை குறைக்க மட்டுமே உதவுமே தவிர தேர்தலில் எந்த பலனையும் அளிக்காது.

கூட்டமாக இருக்கும் இடத்திற்கு சென்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டால் ஓட்டாக மாறாது. கூட்டம் என்றுமே ஓட்டாக மாறாது. 1 லட்சம் பேர் கூட்டத்தை திரட்டி பிரச்சாரம் செய்த காமராஜர் தோற்றுப்போனார். மூன்றாவது முறையாக 300 சீட்டுகளுக்கு மேல் வெற்றிபெற்று நரேந்திரமோடி பிரதமராக அமர்வார். கடந்த தேர்தலில் கூட்டணி இருந்தபோதே திமுக வை எதிர்த்து வெற்றியை கைப்பற்ற முடியவில்லை. தற்போது பலவீனமாக இருக்கும் அதிமுக இருந்தாலும் அதனை சரி செய்யும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். அண்ணாமலை வந்தமுதலே அதிமுக கூட்டணியில் இருந்து முறிவு ஏற்பட உள்நோக்கத்தோடு முடிவு செய்தார்.

கொங்கு மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமியைவிட தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதே அண்ணாமலை எண்ணம். அவர் எண்ணத்தில் மண்விழும் அதற்காகத்தான் என் மண் என்று பெயர் வைத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் நிலைதான் வேறு இந்தியா முழுவதும் ராமர்கோவில் விவகாரம் பாஜகவிற்கு கைகொடுக்கும். தன்னைத்தானே பிரபலப்படுத்தும் முயற்சியில் அண்ணாமலை இருக்கிறார் மோடியின் சாதனையை அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்வதில்லை. ஒரு கட்சி தேர்தலில் வெற்றிபெற பூத் கமிட்டி முக்கியம். 70 ஆயிரம் பூத் கமிட்டி இருக்க வேண்டிய நிலையில் 10 ஆயிரம் பூத் கமிட்டிகூட இல்லாத ஒரு பலகீனமான நிலையில் தமிழக பாஜகவை அண்ணாமலை வைத்திருக்கிறார் என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

ஒற்றை தீக்குச்சியில் கலைஞரின் பேனா நூண்கலை ஓவியர் அசத்தல்

திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தாண்டி எந்த கட்சியும் வரக்கூடாது