in

மீண்டும் ஒரு பள்ளியின் காதல் கதை ‘நினைவெல்லாம் நீயடா’

மீண்டும் ஒரு பள்ளியின் காதல் கதை நினைவெல்லாம் நீயடா

 

அமைதியான ஓடையில் சத்தம் எழுப்ப வரும் மீண்டும் ஒரு பள்ளியின் காதல் கதை நினைவெல்லாம் நீயடா.. பற்றி இயக்குனர்

ஆதி ராஜேந்திரன் இயக்கத்தில் ‘நினைவெல்லாம் நீயடா’ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.

இவர் ஏற்கனவே சிலந்தி, அருவா, சண்ட போன்ற படங்களை இயக்கியவர். இப்படத்தில் நாயகனாக பிரஜன், நாயகியாக மனிஷா யாதவ் இவர்களுடன் ரெட்டின் கிங்ஸ்லீ, ஆர் வி உதயகுமார், தீக்குச்சி தண்டபாணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை லேகா தியேட்டர்ஸ் சார்பில் ராயல் பாபு தயாரித்துள்ளார் இளையராஜாவின் 1417 வது படமாக நினைவெல்லாம் நீயடா படம் உருவாகி இருக்கிறது.

February 29ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாகும் இப்படத்தை பற்றி இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது நினைவெல்லாம் நீயடா படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது நிச்சயம் இந்த பாடத்தை காதலர்கள் கொண்டாடுவார்கள்.

ரசிகர்களுக்கு மாசான மற்றும் ஒரு சம்பவம் என்னவென்றால் இளையராஜா இசையில் அவரே எழுதி யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பது இந்த படத்துக்கு கூடுதல் பிளஸ்.

பள்ளி பருவத்தில் ஏற்படும் முதல் காதல் மண்ணுக்குள் போகும் வரை மனதில் ஆழமாக பதிந்திருக்கும் என்பது தான் இப்படத்தின் மையக் கருத்து. இப்படத்தை பார்த்த பிறகு நிச்சயம் ரசிகர்களுக்கு நாம் படித்த பள்ளியை ஒருமுறை சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். கிளைமாக்ஸ் காட்சியில் உங்கள் கண்களில் மட்டும் நீர் வராது இதயத்தையே பிழிந்து எடுக்கும் அளவிற்கு காட்சி பிரமாதமாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் நடிகைகள் அனைவரும் அருமையாக தங்களை வெளிப்படுத்தி இருக்கின்றனர், குறிப்பாக காதல் காட்சியில் பிரஜன் மற்றும் மனுஷா யாதவ் பின்னி எடுத்து இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு உயிரோட்டமாக அமைந்தது ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு இந்த படத்தின் நாடித்துடிப்பே இளையராஜாவின் இசை தான் நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக இந்த படம் வந்திருக்கிறது.

நிச்சயம் இந்த படம் ரசிகர்கள் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த படத்தின் டீசரை சமீபத்தில் இயக்குனர் சசிகுமார் வெளியிட்டார்.

ரசிகர் மதியில் பெரும் பாராட்டை பெற்ற இந்த டீசர் எங்கள் படத்திற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம் தரமான படங்களை ரசிகர்கள் என்றும் ஹிட் அடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இப்படத்திற்கு உண்டு என்ற நம்பிக்கையிலும் இந்த படத்தை நாங்கள் வெளியிடுகின்றோம். ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், 96 படங்களின் வரிசையில் ‘நினைவெல்லாம் நீயடா’ படமும் நிச்சியம் ஒரு ரசிகர்களின் மனதில் ஒரு பதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

What do you think?

பிரபல நடிகருக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனை

விசிக துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுன் நியமனம்