in

மயிலாடுதுறையில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவின் ஆய்வுக் கூட்டம்


Watch – YouTube Click

மயிலாடுதுறையில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது , தொடர்ந்து 250 கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்களை மாவட்டத்தில் செயல்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்குழுவின் தலைவர் அன்பழகன் பேட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி , சீர்காழி , மயிலாடுதுறை ஆகிய வட்டங்களில் 12 இடங்களில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் அன்பழகன் தலைமையின் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரன் , சிவக்குமார் , இராமச்சந்திரன் , பரந்தாமன் , நாகை மாலி , ஒ.எஸ்.மணியன் , பூமிநாதன் மற்றும் எம் பி இராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார் :-

தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் இன்று மேற்கொள்ளப்பட்டதில் பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திருமுல்லைவாசல் கடல் அரிப்பு தடுப்பு சுவர் ஆழப்படுத்தும் பணிக்கு ரூ.50 கோடி மதிப்பீட்டிலும், சந்திரபாடி மீன் இறங்குதளத்தில் கரை பாதுகாப்பு சுவரை மேம்படுத்துவதற்கு ரூ.32 கோடி மதிப்பீட்டிலும், பாளமேடு மீன் இறங்குதளத்தில் கரை பாதுகாப்பு சுவர் மேம்படுத்துவதற்கு ரூ.25 கோடி மதிப்பீட்டிலும், புதுக்குப்பம் மீன்பிடி இறங்குதளத்தை மேம்படுத்துவதற்கு ரூ.25 கோடி மதிப்பீட்டிலும், சின்னமேடு கிராமத்தில் மீன் இறங்குதள முகத்துவாரத்தை ஆழப்படுத்துவதற்காக ரூ.24 கோடி மதிப்பீட்டிலும், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் உட்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரூ.10 கோடி மதிப்பீட்டிலும், புதுப்பேட்டையில் மீன் இறங்குதளம் ரூ.10 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் சீர்காழி வட்டத்தில் பெருங்தோட்டம் பகுதியில் படகு இல்லம் அமைக்க ரூ.30 கோடி மதிப்பீட்டில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் சாலைமேட்டில் மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும் என கிட்டத்தட்ட 250 கோடி ரூபாயில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று மேற்கண்ட பணிகள் நடைபெறுவதற்கு சட்டமன்ற மதிப்பீடு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

மயிலாடுதுறையில் போக்குவரத்தை குறைக்கும் வகையில் விரைவில் ரிங் ரோடு அமைக்க இந்தக் குழுவின் மூலமாக பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார். பாதாள சாக்ககடை பிரச்சனையை தீர்க்கும் வகையில் 52 கோடிக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஒப்பந்ததாரர்கள் உறுதி செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படும் என தெரிவித்தார்.

500 புதிய பேருந்துகள் அறிமுகம் செய்ய இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்து இருப்பதாகவும் , அதில் மயிலாடுதுறைக்கு போதிய பேருந்துகள் கண்டிப்பாக ஒதுக்கி தரப்படும் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

தாமரையால் உடலுக்கு, நீர்நிலைகளுக்கு, நாட்டுக்குக் கேடு

நேரடியாக களத்தில் இறங்கி அதிரடி காட்டிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்