in

நேரடியாக களத்தில் இறங்கி அதிரடி காட்டிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்


Watch – YouTube Click

நேரடியாக களத்தில் இறங்கி அதிரடி காட்டிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்.

பசுமையான திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அறவே ஒழிக்கப்படும்…..

நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு 10 லட்சம் மதிப்பிலான 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த
மாவட்ட ஆட்சியர்…..

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் திருவண்ணாமலை நகரில் மத்திய பேருந்து நிலையம், கடலை கடை சந்திப்பு, சிவன் பட வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து சிவன் பட வீதியில் உள்ள மாதாஜி என்டர்பிரைசஸ் என்ற கடையின் குடோனில் மலை போல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து மாவட்ட ஆட்சியர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் முற்றிலுமாக தடை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், குறிப்பாக திருவண்ணாமலை பசுமையான மாவட்டமாக மாற்ற ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் முற்றிலும் தவிர்க்கப்படும் எனவும், புற்றுநோயை உண்டாக்கும் இது போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து பசுமையான திருவண்ணாமலை மாவட்டமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக இதுபோன்று பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படுவதால் அதிலிருந்து பல்வேறு விஷ வாயுக்கள் வருவதினால் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும், குப்பைகளை பிளாஸ்டிக் கவரில் போட்டு குப்பை கிடங்கில் கொட்டுவதால் அதனை பிரிப்பதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாகவும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் முற்றிலும் தடை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், தற்போது நடைபெற்ற இந்த ஆய்வில் 10 லட்சம் மதிப்புடைய 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

மயிலாடுதுறையில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவின் ஆய்வுக் கூட்டம்

நாங்குநேரியில் காரில் கொண்டு வந்த ரூ1 27 கோடி பணம் பறிமுதல்