in

மலேசியா புதிய மன்னர் ஜோகூர் சுல்தான் இப்ராகிம்


Watch – YouTube Click

மலேசியா புதிய மன்னர் ஜோகூர் சுல்தான் இப்ராகிம்

மலேசியாவின் 17வது புதிய மாமன்னராக ஜோகூர் மாநிலத்தின் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் பதவியேற்றார். மாமன்னரின் முடிசூட்டு விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் மலேசியா நாட்டின் புதிய மன்னராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்த முடிசூட்டு விழாவில் மாநில மன்னர்கள், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், துணைப் பிரதமர்கள் அகமது ஸாஹிட் ஹமிடி மற்றும் ஃபடில்லா யூசோப், அரசாங்க அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அதன்படி, சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் (65 வயது) மலேசியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாமன்னராக ஆட்சி புரிவார்.

ஏற்கனவே மலேசியாவின் மன்னராக இருந்த பாகாங் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் நிறைவுபெற்றதை அடுத்து, புதிய மன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ஜோகூர் மன்னர் மலேசியா மாமன்னராக முடிசூடப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். 1984 – 1989 இடைப்பட்ட காலகட்டத்தில் மாமன்னர் இப்ராகிமின் தந்தையான காலஞ்சென்ற சுல்தான் மஹ்முட் இஸ்கந்தர் மாமன்னராக இருந்தார்.

தற்போது, அதே ஜோகூர் மாநிலத்தின் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் மன்னரானார். இதுபோன்று, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பேராக் மாநில ஆட்சியாளரான சுல்தான் நஸ்‌ரின் முய்ஸுதீன் ஷா மலேசியாவின் துணை மாமன்னராக செயல்படுவார்.

மலேசியாவில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் புதிய மாமன்னர் மூடிசூடப்படுவார். மலேசியாவின் 9 மாநில மன்னர்கள் சுழல்முறையில் மாமன்னராக அரியணை ஏறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் சென்னை ஐகோர்ட் கேள்வி

தமிழ்நாட்டில் இன்று முதல் மது உயர்வு