in

கோடைமாத …குஜாலம்… குழந்தைகளை கவர… ஹாலிவுட் தரத்தில் முதல் முறையாக வெளிவரும் கஜானா படம்

கோடைமாத …குஜாலம்… குழந்தைகளை கவர… ஹாலிவுட் தரத்தில் முதல் முறையாக வெளிவரும் கஜானா படம்

பிரபாதீஸ் ஷாம்ஸ் திரைகதை மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் கஜானா படத்தை 4 ஸ்கொயர் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது இப்படத்தில் யோகி பாபு, வேதிகா, சாந்தினி போன்றோர் முக்கிய இடத்தில் நடிக்கின்றனர் இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் பிரதாப் போட்டான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், கோடை விடுமுறைக்கு குழந்தைகளை மகிழ்விக்க கஜானா வெளியாகிறது இப்படம் குறித்து இயக்குனர் பிரபாதீஸ் கூறியதாவது பான் இந்திய மூவியான இப்படம் உலக அளவில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் கதை களத்துடனும் காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது.

கஜானா படம் இந்தியானா ஜோன்ஸ் நேஷனல் ட்ரெஸ்ஸஸ் (national treasures ) போன்ற ஹாலிவுட் படங்களுக்கு இணையான மாயா காட்சிகளும், மிருகங்களின் சாகச காட்சிகளும் சண்டை காட்சிகளுடன் அற்புதமாக உருவாகி இருக்கும் படம் இதுவரை நாம் சிற்ப வடிவில் பார்த்து வந்த தமிழர் வரலாற்றில் அழிந்து போன ஆதி உயிரினமான யாழ் விலங்கை முதல் முறையாக இப்படத்தில் காட்டியிருக்கிறோம் டைனோசரையே மிஞ்சும் யாழ் விலங்கை முதன்முறையாக திரையில் கொண்டு வந்திருக்கும் படம் கஜானாவாகத்தான் இருக்கும். படத்தில் விலங்குகளுடன் நடிகர்கள் பேசுவது போன்ற உயர்தர தொழில்நுட்பத்துடன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன இந்த பணிகளுக்காக மட்டுமே இரண்டு வருடங்கள் நாங்கள் உழைத்தோம் மலேசியா, லண்டன் போன்ற நாடுகளில் இப்படத்தின் வி எஸ் எஸ்(vfx} பணிகள் வடிவமைக்கப்பட்டன.

சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் விலங்குகளை நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம் இப்படத்தில் யோகி பாபு தனது காமெடியால் அதகலபடுதி இருக்கிறார் இப்படம் நகைச்சுவைக்கும் முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது மேலும் வேதிகா, சாந்தினி ஆகியோர் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கின்றனர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில் கோடை கொண்டாட்டமாக கஜானா வெளியாக இருக்கிறது உலக தரம் வாய்ந்த இந்த படம் கோடை விடுமுறையை முன்னிட்டு மே முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளும் தற்பொழுது தொடங்கி இருக்கின்றன ஆக்சன் மற்றும் நகைச்சுவை காட்சிகளுடன் அமைக்கப்பட்டிருந்த இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று நம்புகிறோம் அனைவரும் தியேட்டருக்கு வந்து இப்படத்தை பார்த்து ஆதரவு தரக வேண்டும் என்று இயக்குனர் பிரபாதீஸ் தெரிவித்துள்ளார்

What do you think?

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு எருமையால் கிராம மக்கள் அச்சம்

புதுச்சேரி பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைகீழாக நின்று போராட்டம்