கடனை கட்ட சொல்லி தமிழக அரசு விவசாயிகளின் கழுத்தை நெரிப்பதாக நூதன முறையில் விவசாயிகள் கழுத்தில் கயிறு கட்டி இழுப்பது போல் போராட்டம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதிகள் விவசாயிகள் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியதை அடுத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே தற்போது தள்ளுபடி செய்துள்ளதுள்ளார்.
தற்போது உண்மைக்கு புறம்பாக முதலமைச்சர் செயல்படுகிறார் கடனை கட்ட சொல்லி தமிழக அரசு எங்கள் கழுத்தை நெரிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர் இதனால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து கழுத்தில் கயிறுகளை கட்டி இழுத்துச் செல்வது போல நூதன முறையில் விவசாயிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


