in

வலம்புரி விநாயகர் திருக்கோவில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

வலம்புரி விநாயகர் திருக்கோவில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

 

ஈரோடு மாவட்டம் மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோவில் உள்ளது இங்கு சக்கரகட சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விநாயகருக்கு சிறப்பான முறையில் சங்கடகர சதுர்த்தி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோவில் உள்ளது.

திருக்கோவிலில் ஆனி மாத சங்கர கட சதுர்த்தி முன்னிட்டு அருள்மிகு வலம்புரி விநாயகருக்கு பால் தயிர் இளநீர் சந்தனம் பஞ்சாமிர்தம் மஞ்சள் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண திரவியங்கள் மூலம் சிறப்பான முறையில் அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பல்வேறு விதமான மலர் மாலைகளும் தங்க ஆபரணங்களும் சூடி சிறப்பான அலங்காரத்தில் காட்சியளித்த அருள்மிகு வலம்புரி விநாயகருக்கு உதிரிப்பூக்களால் அர்ச்சனைகள் செய்து கோபுர தீப ஆரத்தி கும்ப தீப ஆரத்தி பஞ்ச தீப ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான தீப ஆராதனைகளும் 16 வகையான சோரச உபச்சாரங்களும் காட்டப்பட்டன அதை தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு வலம்புரி விநாயகரின் அருளை பெற்று சென்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் விபூதி பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் – சங்கடஹர சதுர்த்தி

திருநங்கைகள் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காமல் யாசகம் கேட்க வேண்டும்