in ,

தல தோனியின் உணவு, ஃபிட்னஸ் ரகசியம்


Watch – YouTube Click

தல தோனியின் உணவு, ஃபிட்னஸ் ரகசியம்!

கேப்டன் கூல், மாஸ்டர் மைண்ட் என்றெல்லாம் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தல தோனி அவரின் கிரிக்கெட் டீம்-க்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக வாழ்ந்து வருகிறார். அவரை போன்ற டீ சர்ட் அணிவது, அவரை போன்று ஹேர் கட் செய்வது, அவரது ஸ்டைலை ஃபாலோ செய்வது என ரசிகர்கள் அதில் இரட்டிப்பான மகிழ்ச்சி அடைகின்றனர்.

அந்த வகையில் அவரின் உணவுப் பழக்க வழக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்தும் அவரின் ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக தோனிக்கு பால் மற்றும் பால் பொருட்கள் மிகவும் பிடித்தமான ஒன்று என அவரே பல நேர் காணல்களில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரின் diet குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு சிஎஸ்கே செஃப் நேர்காணல் கொடுத்துள்ளார். அப்போது பேசிய அவர், தோனி கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது உணவுப் பழக்க வழக்கத்தில் அதீத கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.

பொதுவாக அவர் கலையில் உட்கொள்ளும் உணவில், அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொருட்கள், அதனுடன் மூன்று இட்லி மற்றும் சாம்பார் இருக்கும் எனத் தெரிவித்தார். மேலும், சவுத் இந்தியன் ஃபில்டர் காபி அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனவும் அவர் விளக்கியுள்ளார்.

அதேபோல, தோனி ஒரு சிக்கன் பிரியராம். அவர், தனது மதிய உணவில் உட்கொள்ள விரும்பும் உணவு சார்ட்டை சிஎஸ்கே செஃப் குறிப்பிட்டார். அதில், பாதி அளவு கிரில்லுடு சிக்கன் (grilled chicken) , மசிக்கப்பட்ட உருளை கிழக்கு வகை (Mashed potato) ப்ரொக்கோலி (broccoli), சிக்கன் டிக்கா (chicken tikka), தால் மக்கானி (Dal makhani), பட்டர் சிக்கன் (butter chicken), 4 நாண் (4 pieces naan), கிரீன் சாலடு (green salad) உள்ளிட்டவைகளில் தேர்வு செய்து உட்கொள்வாராம்.

மேலும், இரவில் சிக்கன் டிக்கா (chicken tikka) சான்வெஜ், கிரீன் சாலடு (green salad) மற்றும் ஆரஞ்ச் ஜூஸ் குடிப்பாராம். இதனுடன் சேர்ந்து அன்றாடம் தனக்கான வர்க் அவுட் விஷயங்களிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்துகிறார்.

கிரிக்கெட்டைத் தாண்டி ஃபுட்பால் (football), பேட்மிண்டன் (Badminton), டென்னிஸ் (Tennis) விளையாட்டுகளில் தனக்கு அதீத ஆர்வம் உண்டு என தோனியே தனது நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். அவர், தனது சிறு வயதில் புட்பால் விளையாட்டில்தான் அதீத ஆர்வம் காண்பித்துள்ளார்.

கோல் கீப்பராக கலக்கிய தோனி கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கிற்கு ஏற்றவராக இருப்பார் என்ற அவரது கோச்சின் தொலைநோக்குப் பார்வையும், தோனியும் விடா முயற்சியும்தான் இன்று அவர் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்துள்ளது.

ஃபுட்பால் விளையாடுவதால் காலிற்கும், பேட்மிண்டன் விளையாடுவதால் கையிக்கும் சிறந்த உடற்பயிற்சியாக அமையும் நிலையில் அன்றாடம் தனது ஜிம் வர்க் அவுட், தியானம் உள்ளிட்டவற்றையும் அவர் முழுமையாக கடைப்பிடிப்பாராம். அதையெல்லாம் கடந்து அவர் தனது நேரத்தை முழுமையாக குடும்பத்தினருடன் செலவிடுவதைத் தவிர்க்க மாட்டார் என்பதையும் அவரே தனது நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

ஊர் முழுவதும் கருப்பு கொடியை கட்டி எதிர்ப்பு காட்டி வரும் இஸ்லாமியர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 நாட்களாக கண்ணாமூச்சி ஆடிவரும் சிறுத்தை, இன்றும் தடயங்கள் எதுவும் கிடைக்காததால் வனத்துறை விரக்தி