in

திமுக எம்பி கனிமொழி கருணாநிதியின் காரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்


Watch – YouTube Click

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பரப்பரை மேற்கொண்டு வரும் திமுக எம்பி கனிமொழி கருணாநிதியின் காரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர் 

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஆதரித்து, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி இன்று நெல்லை பாளையங்கோட்டை பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக இன்று காலை பாளையங்கோட்டை காய்கறி சந்தை மற்றும் மர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார். தொடர்ந்து தட்சிணாமாற நாடார் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து திமுக மத்திய மாவட்ட அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவரது காரை வழிமறித்த தேர்தல் பறக்கும் படையினர், காரை முழுவதும் சோதனை இட்டனர் அப்போது சோதனைக்கு கட்டுப்பட்டு காரை விட்டு இறங்கி நின்றார் கனிமொழி. அதே நேரம் காரின் பின் இருக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அமர்ந்திருந்தார் அவரும் சோதனைக்குட்பட்டு காரை விட்டு கீழே இறங்கி நின்றார். காரில் இருந்த சால்வைகள் மற்றும் பரிசு பொருட்களை முழுவதையும் சோதனை செய்த பறக்கும் படையினர் பின் சோதனையை முடித்துக் கொண்டனர். சோதனைக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் கனிமொழியும், அமைச்சர் தங்கம் தென்னரசுவும் தொடர்ந்து காரில் புறப்பட்டு சென்றனர்.

பரப்பரைக்கு வந்த இடத்தில் கனிமொழி கருணாநிதி காரை சோதனையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Watch – YouTube Click

What do you think?

அனைத்து அரசு பள்ளிகளிலும் CBSE பாடத்திட்டம்

கனிமொழி எம்பியுடனானா சந்திப்புக்கு பிறகு சங்க நிர்வாகிகள் கூட்டாக அறிவிப்பு