திருவாடானை அருகே சவுடு மண் அள்ள எதிர்ப்பு; ஜேசிபி, டிராக்டர்களுடன் சென்ற நபர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சேனைவயல் அய்யனார் கோவில் பகுதியில் கோட்டா ஊரணி அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ஊரணியில் உள்ள கரையை உடைத்து சவடு மண் அள்ளும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகச் சம்பவ இடத்தில் திரண்டு, மண் அள்ளும் பணிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊரணி கரையை உடைத்து மண் அள்ளினால், நிலத்தடி நீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும், மழைக்காலங்களில் தண்ணீரைச் சேமிக்க முடியாமல் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் குற்றம்சாட்டி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் தொடர் எதிர்ப்பை கண்டதும், சவடு மண் அள்ள வந்த நபர்கள் வேறு வழியின்றித் தங்களது ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து உடனடியாகக் கிளம்பிச் சென்றனர்.
பொதுமக்களின் இந்த அதிரடி எதிர்ப்பால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் பல டிராக்டர்களில் பதிவினை இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது


