in

பண்ருட்டியில் சங்க கால மக்கள் பயன்படுத்திய அடுக்கு வகை உறை கிணறுகள், பானை ஓடுகள் கண்டெடுப்பு

பண்ருட்டியில் சங்க கால மக்கள் பயன்படுத்திய அடுக்கு வகை உறை கிணறுகள், பானை ஓடுகள் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள பூண்டி வருவாய் கிராமத்த சேர்ந்த வரிஞ்சிப்பாக்கம் பகுதிகளில் செங்கல் சூளை போடுவதற்காக பள்ளம் தோண்டப்பட்ட போது பள்ளத்தில் திடீரென சங்க கால மக்கள் பயன்படுத்தப்பட்ட மூன்று அடுக்கு உறை கிணறுகள், குறியீடு பானை ஓடுகள்,சுடுமண் காதணி மற்றும் பழங்கால மக்களின் பல்வேறு எச்சங்கள் கண்டறியப்பட்டதாக அப்பகுதி மக்கள் தொல்லியல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

அதன் பேரில் தொல்லியல் ஆய்வாளர்கள் தண்டபாணி, இமானுவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் கண்டறியப்பட்ட பொருட்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை எனவும், உறைக்கிணறுகள் சுமார் 100 மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே பதியப்பட்டு இருப்பதாகவும், இவைகள் சங்ககால மக்கள் வறட்சியின் போது குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்ட உறை கிணறுகள் என்றும் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் தேவைக்காகவும் வீட்டின் பயன்பாட்டிற்காகவும் உறை கிணறுகள் தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மை வரை இருந்து வருவதாகவும் ஆற்று படுகை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள.

இவ்வாறான உறை கிணறுகள் வறட்சி காலங்களில் அக்கால மக்கள் பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற உறை கிணறுகள் தமிழகத்தில் கீழடி பூம்புகார் அரிக்கமேடு மாமல்லபுரம் போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

What do you think?

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் இன்று மீன்களின் விலை நிலவரம்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 500 கிலோ தீயிட்டு அகற்றம்