in

தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

 

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழாவும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், இரத்த தான முகாம்,பொதுமக்களுக்கு காலை உணவு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கல மேட்டுத் தெருவில் தமிழக வெற்றி கழகம் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கோபிநாத் கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து குத்துவிளக்கேற்றி வைத்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் நிறைவாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் அரிசி காய்கறி உள்ளிட்ட வீட்டு சமையலுக்கு தேவையான பொருட்களை வழங்கினார்.

இதில் தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What do you think?

புதுச்சேரி அரசியலில் மக்கள் காசு வாங்கிக் கொண்டுதான் ஓட்டு போடுகின்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்

அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அச்சு இயந்திரம் தவெக பிரமுகர்