புதுச்சேரி அரசியலில் மக்கள் காசு வாங்கிக் கொண்டுதான் ஓட்டு போடுகின்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்
எவ்வளவு தான் தொகுதியில் பணிகளை செய்தாலும் பணம் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது, அரசியல் குறித்து மாணவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்
புதுச்சேரி அடுத்த கூடப்பாக்கம் அண்ணாமலை ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி கஸ்மஸ் சார்பில் பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு புதிதாகக் கழிப்பறை வளாகம் கட்டி கொடுக்கப்பட்டு அதன்
திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கினார்.
தொடர்ந்து பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்க பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதற்கு என்ன தேவை என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும், அதேபோன்று தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு ஆர்வம் காட்டும் மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்க ஏன் முன்வரவில்லை என்பதையும் அரசு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்,
அரசுப் பள்ளியில் தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் படிப்பதற்கு மாணவர்கள் இல்லை, அரசியலில் மக்கள் காசு வாங்கிக் கொண்டுதான் ஓட்டு போடுகின்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள் எவ்வளவு தான் தொகுதியில் பணிகளை செய்தாலும் பணம் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது, மக்களின் செயலால் சரியான சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியாது, அரசியல் குறித்து மாணவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
எனக் கேட்டுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், சிபிஎஸ்இ பள்ளிகளில் படிப்பதற்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
மேடைப்பேச்சு: கார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினர் புதுச்சேரி.


