வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீகல்யாண சண்முகநாதர் தெப்ப உற்சவம்.
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கொட்டும் மழையில் நடைபெற்ற வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீகல்யாண சண்முகநாதர் தெப்ப உற்சவம். தெப்பத்தின் மீது தூண்கள், தோரணங்கள் சுதை வடிவில் சுவாமிகளுடன் மண்டப வடிவில் அமைக்கப்பட்ட தெப்பம் பக்தர்களை கவர்ந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தளமாகவும் திருமண தடை நீங்கும் தலமான இக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீகல்யாண சண்முகநாதர் தெப்ப உற்சவம் நடைபெற்றது
. 
இதனை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீகல்யாண சண்முகநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் தீர்த்தகுளத்தில் தெப்பத்தின் மீது தூண்கள், தோரணங்கள் சுதை வடிவில் சுவாமிகளுடன் மண்டப வடிவில் மின்னோளியில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களை கவர்ந்த தெப்பத்தில் வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீகல்யாண சண்முகநாதர் சுவாமி எழுந்தருள செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மகாதீபாரதனை செய்யப்பட்டது. அப்பொது திடீர் என பெய்த கொட்டும் மழையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 5 முறை தீர்த்த குளத்தில் வலம் வந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தெப்ப உற்சவத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

