in

147 அடி உயர ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

147 அடி உயர ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 80வது சுதந்திர தின விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் 147 அடி உயர ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த தீட்சிதர்கள்,பக்தர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திரதின கொண்டாட்டம்.

இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா நாடு முழுக்க மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிழக்கு பகுதியில் உள்ள 147 அடி உயர ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவில் தீட்சிதர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தனர்.

முன்னதாக நடராஜருக்கு முதல் கால பூஜை நெய் வைத்தியம் முடிந்த பின்பு நடராஜர் முன்பு தேசியக் கொடியை அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்த பிறகு கோயில் வளாகத்தில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கிழக்கு பகுதியில் உள்ள 147 அடி உயர ராஜ கோபுரத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்த பொதுமக்கள் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தினத்தை மிக விமர்சையாக கொண்டாடினர்.

விடுமுறை தினம் என்பதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பொதுமக்கள் ராஜ கோபுரத்தில் தீட்சிதர்கள் தேசிய கொடிஏற்றி மரியாதை செய்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

What do you think?

புதுச்சேரியில் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தின் 16-ஆம் ஆண்டு ஆடி திருவிழா அம்மன் வீதி உலா நடைபெற்றது

Estratégia de Roleta: Guia Completo para Jogadores Experientes