தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் மாநில சங்க செயற்குழு கூட்டம் வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
மாநிலத் தலைவர் சத்தியராஜ் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் மாயமுனுசாமி வரவேற்றார்.பொதுச் செயலாளர் குப்புசாமி பொருளாளர் செல்வராஜ், செய்தி தொடர்பாளர் கவிஞர் உதய நிலவு, மாநில துணைச் செயலாளர் முருகவேல், கிழக்கு மாவட்ட தலைவர் நாகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது,
தமிழக இயல், இசை,நாடக மன்றத்திற்கு புதிய தலைவர் உறுப்பினர் செயலாளர் ஆகியோர்களை கலை சார்ந்த கிராமிய நாட்டுப்புற கலைஞர்களை தேர்வு செய்ய ஆவணம் செய்யுமாறும், இயல் இசை நாடக மன்றம் நலிவுற்ற கலைஞர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் தற்போது ஆண்டுக்கு 500 கலைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது .
வரும் காலத்தில் அதை ஆயிரம் கலைஞர்களுக்கு உயர்த்தி வழங்கிட வேண்டும்,நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத் துறை அடையாள அட்டை வைத்திருக்கும் கலைஞர்களுக்கு பாதி கட்டண சலுகைகள் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது .
அதை முற்றிலும் இலவச பஸ் பாஸ் வழங்க ஆவணம் செய்யுமாறும், பெண் கலைஞர்கள் 50வயதுக்கு மேல் அவர்களால் கலைத்தொழில் செய்ய இயலவில்லை ஆகவே 50 வயது முடிந்த பெண் கலைஞர்களுக்கு நலிவுற்ற கலைஞர்களுக்கான ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநிலத் துணைச் செயலாளர் மாரியப்பன், மேற்கு மாவட்ட செயலாளர் சின்னதுரை, செய்தி தொடர்பாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநிலத் துணைச் செயலாளர் சங்கீதா நன்றி கூறினார்


