புதுச்சேரியில் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தின் 16-ஆம் ஆண்டு ஆடி திருவிழா அம்மன் வீதி உலா நடைபெற்றது
புதுச்சேரி கிருஷ்ணா நகர் 20வது பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் 16-ஆம் ஆண்டு ஆடி திருவிழா மகோற்சவம் வரும் ஆகஸ்ட் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி 13-ஆம் தேதி காலை பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
14-ஆம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பொங்கல் படைத்தல், மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இரவு 7.30 மணியளவில் ஸ்ரீ கெங்கையம்மன் மின் அலங்காரத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் ஊர் பெரியவர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்..


