in

தொடர் மின்வெட்டு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதோடு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக கூறி காலி குடங்களுடன் பெண்கள் பொதுமக்கள் கும்பகோணம் தஞ்சாவூர் இடையிலான சாலையில் மறியல் போராட்டம்

தொடர் மின்வெட்டு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதோடு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக கூறி காலி குடங்களுடன் பெண்கள் பொதுமக்கள் கும்பகோணம் தஞ்சாவூர் இடையிலான சாலையில் மறியல் போராட்டம்

தஞ்சை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் வயலூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குறைந்த மின் அழுத்தம் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்துள்ளது

குடிநீர் விநியோகமும் கடந்து ஒரு மாதமாக முறையாக இல்லாததால் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.இதனை அடுத்து தஞ்சை கும்பகோணம் சாலை வயலூர் பகுதியில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராத நிலையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொடர் மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து,

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.மறியல் காரணமாக தஞ்சை கும்பகோணம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

What do you think?

பெருங்கடல் மாசுபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தலைமன்னார் முதல் சென்னை வரை கடலுக்கு அடியில் சுத்தம் செய்த தன்னார்வலர்கள்

 500 டன் இரும்பில் 7 மாடி IT கோட்டை! தஞ்சையில் பிரம்மாண்ட சாதனை