in

காமன்வெல்த் செஸ் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவனுக்கு புதுச்சேரியில் பாராட்டு விழா


Watch – YouTube Click

புதுச்சேரி…மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவனுக்கு புதுச்சேரியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது..

மூலக்குளம் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர் ராகுல் ராமகிருஷ்ணன். இந்தியாவின் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

இதனையொட்டி பள்ளி வளாகத்தில் மாணவருக்கு பாராட்டு விழா பள்ளி முதல்வர் அருட்தந்தை பாஸ்கல் ராஜ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுவை- கடலூர் உயர் மறைமாவட்ட ஆயர் டாக்டர். பிரான்சிஸ் கலிஸ்ட், சபாநாயகர் செல்வம் மற்றும் உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து, பதக்கங்கள் வழங்கி சிறப்பு செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

தேர்வு நடைபெறும் மையங்களில் வசதிகளை முறையாக வழங்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு களையப்படும்